23.1.11

நாடி

உன் கிறுக்கல்கள் கூட
கவிதையாகின்றன எனக்கு...
உன் புள்ளிகள் கூட
கோலமாகின்றன எனக்கு..
உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..
நாடியில் ஏதும் பிழையில்லை..
நீ என்னை நாடி வந்தால் என்ன பிழையா??

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..//

அருமையான வரிகள்...

kayalvizhi said...

நன்றி சகோதரரே!!

Post a Comment