24.2.11

முடிச்சுமூன்று முடிச்சுகளால் மட்டும்
இறுகியதல்ல நம் உறவு!!

என் இரு கைகளிலும் மருதாணி,
முகம் மறைத்து அலையும் கூந்தல்..
பின்னிருந்து அள்ளி நீயிடும்
கூந்தல் முடிச்சு!

எட்டா உயரத்தில் கொடியல் கட்ட
முயன்று தோற்ற ஏமாற்றம் போக்க
எதிர்பாராமல் வந்து நீ போடும்
நைலான் முடிச்சு!

கண்ணயர்கையில் உனக்கு முன் நான்
எழுந்து செல்லாதிருக்க 
விளையாட்டாய் நீ போடும்
நம் ஆடை முடிச்சு!

முடிச்சுகளால் தினந்தினம் இறுகுகிறது நம் உறவு!!!


நன்றி திண்ணை..

4 comments:

Iniyavan said...

Mani Ratnam? Jhumpa Lahiri? Thamarai?
Who am I reminded of!
Gosh, such a classic is this.

kayalvizhi said...

Thank you ini anna!

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா... செம ரொமான்ஸ் கவிதையா இருக்கே... வாழ்த்துக்கள்

கயல்விழி said...

நன்றி :P

Post a Comment