4.4.11

சுயம்



அழுந்தத் தாழிடுகிறேன் கதவை
வெளித்தொடர்பு முழுதாய்த் துண்டித்து..

கழற்றி மாட்டுகிறேன்
துப்பட்டாவோடு என் சுமைகளையும்..

காலணி அவிழ்க்கும் போது
என் கவலைகளையும் சேர்த்து..

முகம் கழுவும்போது என்
முகமூடிகளையும் அடியோடு..

பயம், பகடு, பாசாங்கு
பொறாமை, பெருமை எனுமனைத்தும் நீங்கி

விளக்கை அணைக்கையில்
இருள் படர்கிறது என் சுயம் மீட்கப்பட்டு...




நன்றி 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041021&format=html

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் கவிதை....

நிரூபன் said...

விளக்கை அணைக்கையில்
இருள் படர்கிறது என் சுயம் மீட்கப்பட்டு..//

இவ் வரிகள் தான் கவிதைக்கு அழகு சேர்க்கும் வரிகள். ஒவ்வோர் நாளும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து மனதிற்குப் பிடிக்காத விடயங்களை நீக்கும் வழியினைக் கவிதை சொல்லி நிற்கிறது.

Ram said...

இன்னைக்கு என் தங்கை என்ன கொண்டுவந்திருக்கிறாள்.!! பாப்போம்..

அட சூப்பரு.!

எனக்கென்னவோ இது நிரூபன் சொல்வது போன்றல்லாமல்.. வெளிஉலகத்திற்காக நடிக்கிறேன்.. பின்னர் இருள்செறிந்த இரவில் மட்டுமே நான் நானாக இருக்கிறேன் என்று சொல்வது போல இருக்கிறது..

அப்படியானால்..அது உண்மைதான்.. வெளியுலகோடு கலந்துவிட்டபோது நாம் இன்றும், என்றும் நடிக்கிறோம்..

என் தங்கை கலக்கிட்டா.!!

கயல்விழி said...

நன்றி மனோ அண்ணா!

நிரூபன் அண்ணா... எழுதி முடித்துவிட்டு படித்து பார்த்த போது நீங்கள் சொல்வது போலும் கொள்ளலாம் என்று தோன்றியது.. நன்றி.. வித்தியாசமான பரிமாணத்தில் கவிதையைப் பார்த்திருக்கிறீர்கள்!!

தம்பி கூர்மதியன் அண்ணா .. இப்படி எண்ணித்தான் அண்ணா எழுதினேன்!!
கவனித்தீர்களா?? உங்கள் பெயரை நான் எழுதினால் முரணாக வருகிறது.. தம்பி அண்ணா என்று!!!

Anonymous said...

Arumai vatikal sister...

கயல்விழி said...

நன்றி சகோ!

Post a Comment