8.4.11

காலங்கள் நீ


காலங்கள் நீ
உன் சுவாசமும் சொற்களும்
எனைத்தீண்டி நரம்புகளினூடே
பாய்ந்து சிலநேரம்
சிலிர்க்கச் செய்கையில் கார்காலம்..!

அன்பின் மிகுதி தொட்டு
ஆரவாரக் கூச்சல் விட்டு
அமைதியாய் உயிரின் விளிம்பு தொடும்
அணைப்பில் நீ குளிர்காலம்..!

இமையாய் விழியெனைக் காத்து,
இறுக என் கரம்பற்றி,
நம் அடித்தடம் நாலன்றி இரண்டாய்த்
தெரிகையில் நீ இளவேனில்..!

சிறு சிறு சேட்டை செய்து
சிலநாள் சினேகமாய் உன்னைச்
சீண்டி நான் சிரிக்கையில்,
செல்லக் கோபத்தோடு நீ முதுவேனில்..!

உனக்குப் பொருத்தமாய் நானும்
எனக்குப் ஏற்றதாய் நீயும்
தேடியெடுத்த ஆடை உடுத்தி
இணையாய்ப் பெருமிதத்தோடு நடக்கையில் முன்பனி..!

நாளின் ஓட்டம் ஓய்ந்து
ஆடிய ஆட்டத்தின் அசதி தேய
உன் மீது முகம் புதைத்து கண்ணையர்கையில்
ஆறுதலாய் தட்டிக்கொடுக்கும் நீ பின்பனி..!

என் ஆண்டின் ஆறு காலமும் நீ!
என் வாழ்வின் முக்காலமும் நீ!

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கார்காலம்..
குளிர்காலம்...
இளவேனில்...
முதுவேனில்..
முன்பனி..
பின்பனி...

அருமையான படையல் வாழ்த்துகள்....

Anonymous said...

woww wowww wowwwww... the best of ursss... congrats:)

Ram said...

இன்னைக்கு காதல் கவிதையோடு வந்திருக்காளா தங்கச்சி..

பாப்போம்..

Ram said...

காலங்கள் நீ இல்லமா.. காலங்களே நீ.!! இது தான் பொருத்தமா இருக்கும்..

//நம் அடித்தடம் நாலன்றி இரண்டாய்த்
தெரிகையில் நீ இளவேனில்..!//

எப்படி தான் யோசிக்கிறாங்களோ!!

//என் ஆண்டின் ஆறு காலமும் நீ!
என் வாழ்வின் முக்காலமும் நீ!//

இது சூப்பரு.!!

கவிதையில உபயோகிக்கப்பட்ட கற்பனை, மற்றும் இந்த தீம்.. செம.. ஆனா ஏதோ ஒண்ணு இடிக்குது.. என்னன்னு புரியல.. உணர முடிஞ்சத, ஃபீல் பண்ண முடியல..

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. ம் ம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் தங்கையே....
நீயிங்கு சொல்லாமல் விட்டிருக்கும்....
வசந்தகாலம் எந்நாளும் உன்வாழ்வில்
நிரந்தமானதாக இருக்கட்டும் குறைவில்லாமல்...

சின்னப்பயல் said...

காலங்களில் அவள் வசந்தம்..!

நிரூபன் said...

இந்தக் கவிதைப் பற்றிப் பல கோணங்களில் பார்வையினைச் செலுத்த முடியும், காதலனின் அன்பினால் கட்டுண்ட பெண் தன் எண்ண ஓட்டத்தை அழகாக வெளிப்படுத்த காலங்களை அழகாக கையாண்டிருக்கிறாள்.

நிரூபன் said...

கண்ணதாசன் காலங்களின் அவளை வசந்தமாகச் சித்திரித்துள்ளார். நீங்கள் காலங்களின் அவனை பலவாறாகக் கண்டுள்ளீர்கள்.

நிரூபன் said...

கவிதையில் வித்தியாசமான சிந்தனையினைக் கையாண்டுள்ளீர்கள்.. மொழி நடையும், வரிக் கோர்ப்பும் அருமையாக இருக்கிறது.

கயல்விழி said...

@ ,mano .. நன்றி சகோ..

கயல்விழி said...

@தம்பி கூர்மதியன்.. காரணம் தெரியலையே அண்ணா.. சரி விடுங்க அடுத்த கவிதை பீல் பண்ண வைக்கும் !!

கயல்விழி said...

@சி.பி.செந்தில்குமார் .. ம் ம் :)

கயல்விழி said...

@வாசன் அண்ணா.. ம்.. வசந்தம் வந்தால் தொடர்ந்து இலையுதிர் காலமொன்று வந்துவிடுமே அண்ணா.. அதற்கு பயந்து தான் சொல்லாமல் விட்டேன்..

கயல்விழி said...

@சின்னப்பயல், நிரூபன்.. நன்றி :)

கீதமஞ்சரி said...

ஆறு காலங்களிலும் ஆறாது காதல் வாழ வாழ்த்துகள். அழகான கவிதை.

கயல்விழி said...

@கீதா .. நன்றி அம்மா...

vetha (kovaikkavi) said...

உன் மீது முகம் புதைத்து கண்ணையர்கையில்
ஆறுதலாய் தட்டிக்கொடுக்கும் நீ பின்பனி..!
nallavatikal sakothary.
Vetha.Elangathilakam
Denmark.

கயல்விழி said...

நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..

Post a Comment