18.4.11

பின்தொடர்கிறேன்..


உன் வலைப்பூவின் பின்தொடர்வோர்
பட்டியலில் புதியதாய் ஒருவர்..
சொடுக்கிப் பார்க்கிறாய்..
அடையாளம் தெரியாமல்
அப்படியே விட்டுச் செல்கிறாய்..
தினந்தினம் படிக்கிறேன்,
உன் அனுபவங்கள் மலர்கின்றன
வலைச்சரத்தின் பூக்களாய்,
என் நினைவுகளும் மலர்கின்றன...
உணவு மேசையில் உணவூட்டிக்
கொண்டே உன் விழிவிரிந்த
முகபாவங்களோடு தினந்தினம்
கேட்ட உன் தினக்கதைகளை
மறக்க முடியாமல் உன் அம்மா...

நன்றி: திண்ணை..

5 comments:

தம்பி கூர்மதியன் said...

என்ன கயல்.. இந்த வலைப்பூ எழுதுறது வீட்டில இருக்குற மாதிரி இருக்கா.? என்ன கோணத்தில எழுதியிருக்க டா..

இங்கே இருக்குளவங்க உன்னுடைய பதிவை படிப்பது உன் அம்மா உன் சிறிய வயது கதைகளை கேட்டது போல இருக்கா.?

ஹி ஹி.. அப்படிதானோ.!!

அப்படிதான் எனக்கு தோணுச்சு.. சூப்பர்.!!

கயல்விழி said...

என் அம்மா என் கவிதைகள முதல் ரசிகையா படிக்க முடியல னு வருத்தப்படறத நெனச்சி எழுதினேன் அண்ணா.. :) :(

கீதா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. அன்று நம் கதையை அம்மா மட்டுமே கேட்டாள். இன்று அகிலமே கேட்கிறது. அதைகேட்டு அம்மாவும் பூரித்துதான் போவாள்.

கயல்விழி said...

@கீதா :)

அருண் said...

பாத்து.....
கயல் திமிங்கலமாகிடப் போகுது!!!!!!!!

Post a Comment