14.5.11

என் பேனாவின் மௌனம்


மூளை அறிந்தும் இதயம்
ஏற்க மறுக்கும் சில விஷயங்களுள்
ஒன்று..
கல்லூரி வாழ்வின் 1461 நாட்கள்
முடிந்து போனதாய்
ஏற்க முடியாதிருக்கும் உங்களுக்கு நான்,

கல்லூரிக்குள் நுழைகையில்
நினைத்ததும் இல்லை...
இரண்டு வருடமாய் இங்கு
எனக்கு உடன்பிறப்புகள் இருப்பார்கள் என்று!
வாழ்க்கைப் பாடம் கற்பிக்க!

சேர்ந்து செலவிட்டது
சில நேரங்கள் தாம்!
பல நாள் சேர்ந்து சிரித்திட மனங்களும்
சில நாள் பிடித்து அழுதிட கரங்களும்
உங்களிடம் கண்டேன்!

என்றும் தொடர்பில் இருப்போம்
எனும் வாக்குறுதிகளின்
வாழ்நாள் அறிந்தவள் நான்..
எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால் நீங்கள்
சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!

உங்களைப் பிரிகையில்
உங்களுக்கென ஏதோ கிறுக்க நினைக்கிறேன்
தொண்டை அடைத்து மனம் கனத்து
என் பேனாவும் காக்கிறது மௌனம்!!


18 comments:

Ram said...

மூளை அறிந்தும் இதயம்
ஏற்க மறுக்கும் சில விஷயங்களுள்
ஒன்று..//

அதை நானும் அனுபவித்திருக்கிறேன்.!!

Ram said...

கல்லூரி வாழ்வின் 1461 நாட்கள்
முடிந்து போனதாய்
ஏற்க முடியாதிருக்கும் உங்களுக்கு நான்,//

உக்காந்து எண்ணுணியோ.!?

Ram said...

வாழ்க்கைப் பாடம் கற்பிக்க!//

எப்படி கத்து கொடுப்பாய்ங்க பாரு.!!

Ram said...

சேர்ந்து செலவிட்டது
சில நேரங்கள் தாம்!//

ஹாஸ்டல்ல தாம் மா படிச்ச..


சில நாள் பிடித்து அழுதிட கரங்களும்//

அய்யோ.!! அழுதியா.? ஏன்டா.?

Ram said...

எனும் வாக்குறுதிகளின்
வாழ்நாள் அறிந்தவள் நான்..//

கலக்கிட்ட டா.. எங்கள் வாழ்நாள் இன்னும் முடியல.. இன்னும் ஒன்றாய் இருக்கிறோம்..

Ram said...

எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால் நீங்கள்
சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!//

இந்த இடத்தில் புன்னகையும் கண்ணீரும் உவமை செய்யப்பட்டுள்ளதா.? ம்ம்.. உன்னால எத்தன பேர் அவதி பட்டாங்களோ அவுங்க எல்லாம் சிரிப்பாங்க, உன்னால சிரிச்சவங்க எல்லாம் அழுவாங்க..

Ram said...

தொண்டை அடைத்து மனம் கனத்து
என் பேனாவும் காக்கிறது மௌனம்!!//

அந்த மௌனத்தின் விடை தானா இது.? சரி.. என்னமோ நாளைக்கே காலேஜ் விட்டு ஓட போற மாதிரி பேசுற.? செம் லீவுக்கு வீட்டுக்கு போறதுக்கு இந்த அலப்பறையா.?

Ram said...

வார்த்தை பிரயோகம், அங்கங்கே கையாளப்பட்ட நயங்கள் அருமை.. உன்னுடையதில் இது தான் பெஸ்ட்னு சொல்ல முடியாது.. இருந்தாலும் சாதாரண எளிய நடையில் நல்ல கவிதை.. சிறப்பு.!!

கயல்விழி said...

// உக்காந்து எண்ணுணியோ.!
இந்த கணக்கயாவது சரியா போட்டிருக்கேனே!!

// என்னமோ நாளைக்கே காலேஜ் விட்டு ஓட போற மாதிரி பேசுற.? செம் லீவுக்கு வீட்டுக்கு போறதுக்கு இந்த அலப்பறையா.

ஐயோ.. என் சீனியர்ஸ் காக எழுதினது அண்ணா..
அவங்க லாம் நாளைக்கே தான் கிளம்ப்ராங்க..

நிரூபன் said...

கல்லூரியில் கூடு கட்டிய பறவைகளின் பிரிவு எப்படி இருக்கும் என்பதை, உங்களின் கவிதை உரைக்கிறது.

Unknown said...

//என் நினைவு வந்தால் நீங்கள் சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!//

ரசித்தேன்...

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலே ஒரு கவிதைதான்

சி.பி.செந்தில்குமார் said...

>>எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால்

நுட்பமான வரிகள்

சின்னப்பயல் said...

கவிதை சிறக்கவில்லை.

கயல்விழி said...

@ நிரூபன்.. சரி தான் சகோ.. அதுவும் அடைக்காத்து வளர்த்திட்ட குஞ்சுகளை விட்டு பறவைகள் பறந்து செல்கின்றன இரை தேடி..

@கலாநேசன்... :-)

@சி.பி.செந்தில்குமார் .. நன்றி சகோ

@சின்னப்பயல்.. சரி சகோ.. அடுத்த கவிதை சிறக்க முயல்கிறேன்..

குணசேகரன்... said...

கல்லூரி வாழ்க்கை கயல்விழியை கவி எழுதவும் வைத்திருக்கிறது...Super.
way of expressing is nice.

அடுத்து ஒரு மகிழ்ச்சியான கவிதை தரவும்.

கீதமஞ்சரி said...

பெண்களின் கல்லூரி நட்பு காலத்துக்கும் தொடர்வதில்லை, ஆண்களைப்போல். அது ஒரு இனம் புரியா வேதனை. நட்பின் பிரிவுக்கு பேனாவின் மெளன அஞ்சலியோ? உளத்திலிருந்து நேரே களத்தில் குதித்த கவிதை போலும். சிறப்பாகவே உள்ளது.

Mecheri Rafeeque said...

pongadi neengalum unka kathalum

Post a Comment