15.5.11

தட்டுப்பாடு


உடன் வரும்
வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு
அன்று கவனிக்காமல் விடப்பட்ட
வெண்ணிலா..
கடந்து செல்லும்
தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற
கட்டிடங்கள்..
தன் குறிக்கோள் மறந்து
தெரு நாய்களுக்கு அடைக்கலம்
தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்..
குச்சி மட்டைகளும்
நெகிழி பந்துகளாலும்
ஆன மட்டைப்பந்து போட்டிகள்..
சிறுநகர வீதி..

ஏதோ சொல்ல நினைத்து
உன் கை சீண்டும் என் துப்பட்டா..
என் நாசி தீண்டும்
ஏதேதோ செய்யும் என
விளம்பரப்படுத்தப்படும்
உன் வாசனை திரவியம்..

காற்றும் எதுவும் புக முடியும்
இடைவெளியில் நாம்..
சொல் தட்டுப்பாடு,
என் மனதில் நிகழும்
வேதிவினை போன்றவற்றை விவரிக்க மட்டும்.. 

9 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்..

குணசேகரன்... said...

அருமை...ஏன் நீங்க தினமும் பதிவு போடறதில்லை...

http://zenguna.blogspot.com

கயல்விழி said...

# கவிதை வீதி # சௌந்தர், நன்றி.. :)

கயல்விழி said...

@குணசேகரன் .. பொறியியல் அடிக்கடி பொறிகளை இயங்கவிடாமல் செய்து விடுகிறது சகோ.. தேர்வுகள் முடிந்ததும் தினமும் பதிவுகள் போடத் தொடங்குகிறேன் :)

A.R.RAJAGOPALAN said...

நடக்கும்
நிகழ்வுகளின் ஊடே
நிதர்சனமாய்
மனப்பதிவுகளை
பதிந்த விதம் அருமை
வாழ்த்துக்கள்

குணசேகரன்... said...

All the best for your exams...

கயல்விழி said...

thanx bro :)

Sateesh said...

அது 'திரவம்' அல்லோ?

கீதா said...

பிரமாதம் கயல்விழி. உங்களுக்கும் உடன் வருபவர்க்கும் தெரியாமல் பின் தொடர்வது போலொரு பிரமை.

Post a Comment