22.5.11

தூசி தட்டுதல்உலக உருண்டையின்
ஏதோ ஒரு பகுதியில்
நடக்கும் அழகிப்போட்டி..
மட்டைப்பந்து போட்டியில்
நெட்டை வீரர் ஒருவரின்
ரெட்டை சதம்..
அரைகுறை ஆடை நடிகையின்
ரகசியதிருமணமும் தொடரும்
விவாகரத்தும்..
தெற்கில் எங்கோ ஒரு
வாய்க்கால் தகராறில்
நிகழ்ந்த குரூரக் கொலை..
நம்ப வைக்க முயற்சிக்கும்
தேர்தல் அறிக்கைகளும்
அது குறித்த
ஆட்சி மாற்றங்களும்..
எத்தனை முறை
வாய் பிளந்து பார்த்தாலும்
திருந்தாத மக்களும்
பயன்படுத்திக்கொள்ளும்
உண்மை மகான்களும்..

என எதுவும்
கிடைக்காத அன்று
மீண்டும் தூசி தட்டப்படுவார்
அன்னா ஹசாரேவும் அவரது கொள்கைகளும்..  

10 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் கை தட்டல்

சி.பி.செந்தில்குமார் said...

உள் குத்து + வெளி குத்து = செம சாத்து

VAIBHAV SRINIVASAN said...

தினமும் ஆவலாய் தமிழ் நாளேடுகளை புரட்டும் பொழுது எனக்கு ஏற்பட்ட ஏக்கம்!!! என் எண்ணங்களின் பிம்பம் உன் எழுத்துக்களில்!!!! இனி வருவார் அண்ணா ஹஜாரே .. நம் எண்ணங்களில்....

A.R.ராஜகோபாலன் said...

நல்லதொரு கவிதை, ஆயினும்
நீங்கள் மேற்காட்டியவர்களில் ஒருவராகவே
அன்ன ஹசாறேவும் படுகிறார் எனக்கு
இதற்கு காலம் வெகு விரைவில் பதில் சொல்லும்

குணசேகரன்... said...

கடைசி வரிகளுக்கு காலம் பதில் சொல்லும்..(யாரையும் நம்ப முடியவில்லை)
மற்ற படி..தோழியின் ஆதங்கம் எனக்கும் உள்ளது...
அருமை தோழி..
உங்கள் ரசிகர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்.

சின்னப்பயல் said...

அதே தூசிய இப்பதானே நீங்களும் தட்டிருக்கீங்க..?!

நிரூபன் said...

பரப்பான வேளைகளில் மட்டுமே பல நிகழ்வுகள் நினைக்கப்படும் என்பதனைப் பூடகமாக உங்கள் கவிதை சொல்லுகிறது.

SUPRAJA KALYANARAMAN said...

கவிதை மிக அருமை! சுருங்கக் கூறல் இதுவன்றோ? அருமை!
//மீண்டும் தூசி தட்டப்படுவார்
அன்னா ஹசாரேவும் அவரது கொள்கைகளும்.. // இதற்கு மாறாக “மீண்டும் தூசி தட்டப்படும் அன்னா ஹசாரேவுக்கும் அவரது கொள்கைகளுக்கும் “ என்று இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Anonymous said...

நல்லதொரு கவிதை,
very good, stimulate the anti-corruption issues, keep it up..
உங்கள் ரசிகர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்.

தம்பி கூர்மதியன் said...

எனக்கு ஒன்றும் புரியவில்லை.!! அன்னா ஹசாரே அப்படி என்ன செய்துவிட்டார் என ஆளுக்கு ஆள் அவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றீர்கள் என்று.!! ஒற்றை நாளில் அன்னா ஹசாரே பெரிதும் மதிக்கப்படும் சுதந்திர தலைவர்கள் நிலைக்கு செல்ல காரணம் என்ன.? மீடியாக்கள் செய்த சூச்சமம் இது.. மொத்த கருத்தையும் ஏற்பேன்.. கடைசி வரியை சத்தியமாக ஏற்கமாட்டேன்.!! இது எனது தனிப்பட்ட கருத்து

Post a Comment