24.5.11

நில்லாத ஓட்டம்


நான் சிந்திக்கத் தொடங்கிய
ஒரு நாளில் நீ பேசத் தொடங்கினாய்!
என் மூளையையும் இதயத்தையும்
மாற்றி மாற்றி படமெடுக்கும்
கதிரியக்கமானாய்!
என் மனமுறைவதைச் சரியாய்ச்
சொல்கிறாய் என்று வியந்திருக்கிறேன் பலநாள்..
நான் சிந்த முடியாது
பகட்டுப் புன்னகையால் மறைத்த
கண்ணீரையும் கோபத்தையும் சிந்தியது நீ!
வரும் நாட்களில் என் துணைவனுக்கும்
வரக்கூடும் பொறாமை
நம் நெருக்கம் கண்டு..
வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
என் சிந்தனை மரிக்கும் வரை
நில்லாத உன் ஓட்டம்..
என் அன்புக்குரிய எழுதுகோலே!

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் எழுதுகோலின் ஓட்டம் நிற்கால் செல்ல என் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதையும் அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டு விட்டேன்..

Ram said...

அட செம டா.. சூப்பர் வார்த்தை அமைப்பு.. எழுத்தை கொண்டு போன விதமும் ரசிக்க வைக்கிறது.. சிறப்பு.!!

Yaathoramani.blogspot.com said...

தலைப்பு
கவிதைத் துவக்கம்
முடிவு
மிகச் சரியாக சிந்தனை
குறித்தே செல்வது
படைப்பின் சீரிய தன்மையை
விளக்கிப் போகிறது
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

எழுது கோல் பற்றி நல்ல கவிதை :))))

sathishsangkavi.blogspot.com said...

அற்புதமான கவிதை...

Post a Comment