2.7.11

பிறப்பிடம்



வெள்ளையர் வேட்டி சேலையிலும்
நம்மவர் ஜீன்சிலுமாய்
நீறு மணமும்
மக்களின் வேண்டுதல்களும்
கமழும் நம் ஊர் கோவில்..

ஊர்களின் பெயர்களும்
விற்கப்படும் பொருட்களும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
முகம் தெரியா மக்கள்
நிறை பேருந்து நிறுத்தம்..

அதிகபட்ச அலங்கோலத்தில்
வீசப்பட்ட புத்தகங்கள்,
துவைத்த துவைக்காத
துணிகளின் அணிவகுப்பு
கொண்ட விடுதி அறை..

என்று எங்கும்
பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்..
என் கண்கள் நோக்கும் உன் கண்கள்
பார்க்கும் போது மட்டும்
மௌனமே தவழ்கிறது சுற்றிலும்..
பேச முடிந்த கவிதை அத்தனையும்
உன் கண்களே பேசிவிடுவதால்..

3 comments:

jayakumar said...

பேச முடிந்த கவிதை அத்தனையும்
உன் கண்களே பேசிவிடுவதால்.. varigal arumai....thodarga....vaalthukkal...

Vetha.Elangathilakam. said...

என் கண்கள் நோக்கும் உன் கண்கள்
பார்க்கும் போது மட்டும்
மௌனமே தவழ்கிறது சுற்றிலும்..
பேச முடிந்த கவிதை அத்தனையும்
உன் கண்களே பேசிவிடுவதால்..
good.
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

Srini said...

உங்களவர்க்கு கவிதை எழுதத்தெரியுமாயின்... இங்கு விட்ட மிச்சத்தையும் தொடர்வோம் :)

Post a Comment