12.7.11

கருப்பு வெள்ளை


வெள்ளை வெளியில்
பொதிந்து கிடக்கும் என் கருவிழியில்
கருப்பு பிம்பமாய் நீ..
படர்ந்து ஆக்கிரமிக்கிறன்றன மனதை
கருப்பும் வெள்ளையும்..

என் கருப்பு இருட்டுக்குள்
வானவில் முளைக்கச் செய்த
வெள்ளை ஒளி நீ..
அறிவியல் கூறாத ஒளிப்பிரிதல்..

மனதின் அனைத்து நிறங்களும்
வெளிக்காட்டும் வெள்ளை நான்..
அனைத்தையும் உள்வாங்கி எதையும்
பிரதிபலிக்காத கருப்பு நீ..

வெள்ளை காகிதம் நான்..
என் மீதான கருப்புப் புள்ளி நீ..
என்னைப் பார்ப்போரெல்லாம்
உன்னைத் தான் காண்கிறார் என்னில்..
வெள்ளை மனம்கொண்ட என்
காரிருள் ஆசைகளுக்கு
வெள்ளைக்கொடி அசைப்பாயா???

4 comments:

குணசேகரன்... said...

ஹாய்..எத்தனை நாளாச்சு உங்க கவிதையை பார்த்து, உங்கள் சிரித்த முகத்தின் profile-ஐ பார்த்து..

என்னைப் பார்ப்போரெல்லாம்
உன்னைத் தான் காண்கிறார் என்னில்..// கொஞ்சம் விளக்குங்க..புரியல..எதைப் பத்தி சொல்லியிருக்கீங்க..

ப்ரேக் எடுத்து..வந்திருந்தாலும்...அதே நயம் உங்க கவிதையில் இருக்கு..

எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுதா?

Anonymous said...

அருமையான கவிதை...கயல்விழி

Reverie
http://reverienreality.blogspot.com/
இனி தமிழ் மெல்ல வாழும்

மதுரை சரவணன் said...

arumai..vaalththukkal

கயல்விழி said...

@குணசேகரன் வணக்கம்.. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உங்கள எல்லாம் சந்திக்கிறதுல எனக்கும் மகிழ்ச்சி..
எக்ஸாம் லாம் முடிஞ்சுது ஒரு வழியா.. விடுமுறையும் முடிஞ்சி வெற்றிகரமா மூன்றாவது ஆண்டுக்கு வந்தாச்சு.. :)

@Reverie,மதுரை சரவணன்... நன்றி.. :)

Post a Comment