28.7.11

காதலும் கவிதையும்


என் கவிதைகளில் பலர் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளை நீ உட்பட
பலரும் காதலிக்கிறார்கள்...
என் கவிதைகளைப் படித்த பலர்
என் காதலைக் காதலிக்கிறார்கள்..
என் கவிதைகளும் உன்னையும்
காதலையுமாய்க் காதலிக்கின்றன..
என் காதல் மட்டும் என் கவிதைகளைக்
காதலிப்பதே இல்லை..
உன்னைக் காதலிப்பதில்
தன்னை என் கவிதைகள் மிஞ்சிவிடுமோ
என்ற பயத்தில்...

17 comments:

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

குணசேகரன்... said...

லவ் பண்றீங்களா கயல்?..Ok OK..:)ஒவ்வொரு கவிதையும் நன்று..

கார்த்திகண்ணு said...

மனதின் அனைத்து...கருப்பு நீ

மிகவும் அருமை

குணசேகரன்... said...

கயல்...
உங்களை முத்தான மூன்று பதிவை எழுத அழைத்திருக்கிறேன். பார்க்கவும் எனது இன்றைய பதிவு. why you didnt post daily...no time ah?

Sekar K.R said...

your lyrics are very fine.This is one of the new way of writing style.I am saying , U are the new trend setter in tamil poems.

கயல்விழி said...

@கலாநேசன் நன்றி சகோ :)

கயல்விழி said...

@ குணசேகரன்.. லவ் ஆ? அதுக்கு என்ன சமாளிக்ற மாதிரி ஒரு பாவப்பட்ட பையன் கெடைக்கனுமே சகோ :) நடந்தா சொல்றேன் :)
உங்க பதிவ பாக்றேன்.. டைம் இல்ல னு சொல்ல முடியாது.. தினமும் எழுத எதுவும் தோணலை :)

கயல்விழி said...

@sekar sir.. Thank you so much sir.. I m really so happy.. Yours is one of the most unforgettable compliments i ve ever got :)

Anonymous said...

mmm..something diffrent.kayalvili....
vetha.Elangathlakam.rdpress.com
http://www.kovaikkavi.wo

Anonymous said...

வித்தியாச சிந்தனை...

முதல் முறை வாசிக்கையில் முரண்பாடு தெரிந்தது...மறுமுறை ரசித்தேன்...புரிந்து..

என் கவிதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்....

சின்னப்பயல் said...

இவ்வளவு குழப்பம் கவிதையில, அப்ப நிச்சயமா ஏதோ இருக்கு,,:-)

சத்ரியன் said...

கவிதை, காதல் - இந்த இரு சொற்களைக் கொண்டு பம்பரம் போல் சுழல்கிறது உங்கள் கவிதை.

கயல்விழி said...

@ kovaikkavi.. thanks madam :)

@ reverie அவசியம் படிக்கிறேன் தோழர்.. நன்றி

@ சின்னப்பயல் அட நீங்க வேற ஏங்க? எதுவும் தான் இல்லையே..

@சத்ரியன் நன்றி சகோ :)

GANESH KUMAR said...

Nice lines , really loved it :):) almost become a fan of ur writings !!!!

கயல்விழி said...

thanks ganesh :)

புஷ்பராஜ் said...

காதலிப்போர் இக்கவிதையை காதலிப்பர்
காதல் மறுப்போர் படித்த பின்
காதல் கதவை திறப்பர்!

கயல்விழி said...

:)

Post a Comment