16.10.11

மீண்டும் ஒரு முறை


மீண்டும் ஒரு முறை
வேண்டும் எனக்கேட்கிறது
உயிர், அந்த சிலிர்ப்பை..
உடல், அந்த பறத்தலை..
மனம், அந்த புல்லரிப்பை..
நீ கேட்ட அந்த நொடி
“என்னோடு வருவாயா
வாழ்வு முழவதும்?”
பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது
இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட
வாக்குவாதங்களுக்கிடையே..
“பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!”
என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது!
“அழகாய் இருக்கிறாய்!” என்று
நீ ரசித்த தருணங்கள்தான்
என் முகப்புத்தக முகப்பைப் பிடித்தன அன்று..
முகப்புத்தகப் படங்களில் பார்த்து கூட உனக்கு
ரசிக்கத் தோன்றுவதில்லை இப்போதெல்லாம்!
வாய் கொள்ள முடியாத அந்த சிரிப்பு,
மனம் கொள்ள முடியாத அந்த களிப்பு,
சொல் கொள்ள முடியாத அந்த தவிப்பு,
எல்லாம் மீண்டும் வேண்டும்
ஒரு முறையல்ல..
வாழ்வு முழுவதிற்கும்!!!
நன்றி: திண்ணை

5 comments:

நிரூபன் said...

வாழ்வின் இனிய தருணங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளத் துடிக்கும் இதயத்தின் வார்த்தைகளால் இக் கவிதை அலங்காரம் பெற்றிருக்கிறது.

புஷ்பராஜ் said...

“என்னோடு வருவாயா
வாழ்வு முழவதும்?” இந்த வரிகள் சிலிர்ப்பை ஏற்படுத்தாவிட்டால்தான் அதிசயம்.

சில வரிகளுக்குள் ‘அலை பாயுதே’ திரைப்படம் பார்த்த சிலிர்ப்பு.......

கயல்விழி said...

நன்றி :)

Tamilraja k said...

பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது
இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட
வாக்குவாதங்களுக்கிடையே..
“பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!”
என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது!

அருமையான பதிவு. மென் சோகம் எங்கையோ ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. வார்த்தைகளை சரியாக சீர்படுத்தினால் படிப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.
இறுதியில் நன்றி திண்ணை எதற்கு?

கயல்விழி said...

நன்றி சகோ! திண்ணையில் வெளிவந்த கவிதை இது..
அதனால் திண்ணைக்கு நன்றி.

Post a Comment