5.11.11

உன்னைக்கண்ட நாளில்

உன்னைக்கண்ட நாளில் தூக்கத்தை நான் மறந்தேன்!
தூக்கம் மறந்த போதும் கனவுகள் பல் கொண்டேன்!
எல்லாக் கனவுகளிலும் உன்னைத் தானே கண்டேன்!
உன் கனவுப் பார்வைகளாலும் என்னை மறந்தே பறந்தேன்!!! 

அன்றைய உந்தன் சட்டை நிறம்,
பக்கத்தில் நின்ற பச்சை மரம்,
எல்லாம் எண்டன் நினைவில் வரும்
அந்த நொடியில் என் நிலை மட்டும் நினைவில் இல்லவே இல்லையே!

உன் கவிதைகளால் என் கனவுகளைக்
களவாடிடுவாய் என்றிருந்தேன்!
கவிஞனாய் இல்லாவிட்டால் என்ன?
என் கவிதையாய் இருக்கிறாய் நீயே!

பேருந்தில் உன்னோடு ஒரு நெரிசல் பயணம்,
பைக்கின் பின்சீட்டில் ஓர் உரசல் பயணம்,
அழகாய் இனிதாய் அமைந்தது போல
வேண்டும் எனக்கொரு வாழ்க்கைப்பயணம்!

5 comments:

சின்னப்பயல் said...
This comment has been removed by the author.
கயல்விழி said...

@சின்னப்பயல் என்ன பாஸ் ஆச்சு??

புஷ்பராஜ் said...

வாழ்த்துக்கள், வேண்டிய வாழ்க்கை பயணம் அமைய!!!

விச்சு said...

எதிர்பார்ப்பு நல்லாதான் இருக்கு!!!
உங்கள் தளத்திற்கு இப்போதுதான் வந்தேன்.இனி தொடர்கிறேன்.

கயல்விழி said...

@விச்சு நன்றி சகோ தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

Post a Comment