29.11.11

புதிர்


அச்சிலிருந்த முக்கோணங்கள் எல்லாம்
எழுந்து பெருத்து தூரத்து மலைகளாய் மாற,
கோடுகள் அனைத்தும் நீலமாயும் நீளமாயும்
வளைந்து நெளிந்து கடல்நீராக,
வட்டங்கள் அனைத்தும் எழுந்து
உருண்டு திரண்டு பாறைகளாய்க் கரைகட்ட,
முற்றுப்புள்ளிகள் தூறலாய்த் தூறி,
எழுத்துக்கள் எண்ணிலடங்காத விண்மீன்களாயும்
மீதமுள்ள வெற்றுத்தாள் நீண்டு வான்வெளியாயும் போக
உருவான ஒரு ரம்யமான சூழலை
விட்டு வர மனமில்லை என்றாலும்,
உடைத்தெறிந்து மீண்டுமனைத்தையும்
கிடத்தி தாளில் பதிக்கிறேன்!
மீண்டிருக்கிறது என் வினாத்தாள்!!!
செலுத்துகிறேன் சிந்தையையும் செயலையும்
விடைத்தாள் மேல்!
முடித்துப் பார்த்தால் விடைத்தாள்
மட்டும் அதிர்வெடிக்கு முந்தைய அண்டமாய்!

6 comments:

விச்சு said...

அப்போ விடைத்தாளில் ஒன்னுமில்லையா? ரசித்தேன்.

Anonymous said...

வெட்டி வேலை

புஷ்பராஜ் said...

அதிர்வெடிக்கு முந்தைய அண்டமாய்! அழகாய் இந்த வரி

கயல்விழி said...

@vichu நன்றி சகோ!

கயல்விழி said...

@புஷ்பராஜ் நன்றி சகோ

Rengabashyam R said...

nice kavithai.best wishs

Post a Comment