29.12.11

இயல்பு


சுற்றத்தில் நீ..
மிதமான வெயிலும்
இதமான குளிரும்
கலந்தே அடிக்கின்றன!

உன் கடைவிழிப்
பார்வை ஒன்றில்
மெலிதாய் ஒரு புயலும்
வேகமாய் ஒரு தென்றலும்
வீசிச் செல்கின்றன!

நீ கடந்து போகும்போது
ஆரிக்கல்களும்
வென்ட்ரிகல்களும்
பதட்டமடைகின்றன!

இயல்பாய் இருப்பதில்லை
எதுவும்,
உன்னைத்தவிர
இந்த சூழலில்!

5 comments:

guna thamizh said...

கவிதை நன்றாகவுள்ளது..

Ramani said...

இயல்புக் கவிதை இயல்பாயில்லை
மிக மிக அருமையாக உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1

Prabu Krishna said...

அருமை சகோ.

suryajeeva said...

instead of auricles and ventricles, sino atrial node would have been perfect...

good poem using science..

புஷ்பராஜ் said...

ஆரிக்கல், வென்ட்ரிக்கல்!!! அறிவியல் கலந்த அனுபவ கவிதை, அருமை!!!

Post a Comment