2.1.12

இருட்டறை

ஒளி அமிழ்ந்த ஓர் இரவு,
நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்..
வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம்
விண்மீன்களைக் காணவில்லையென்று!
கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட
மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்!
யாருமிலா எனதறையின் உட்சுவர்களும்
இருளை உமிழ்ந்து கொண்டிருக்க,
ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்..
என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ
இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்

6 comments:

இடி முழக்கம் said...

வாழ்த்துக்கள்.அழகான கவிதை.
http://www.idimulhakkam.blogspot.com/

Prabu Krishna said...

தமிழ்நாட்டின் மின்தடை நல்ல கவிதைகளை தர உதவுகிறது. அருமை சகோ. (வேற ஏதேனும் பொருள் வச்சு இருக்கிங்களா இதுக்கு?)

சின்னப்பயல் said...

ஒளி அமிழ்ந்த ஓர் இரவு,
இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்///

புஷ்பராஜ் said...

நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்..\\

இருளுக்கு அருமையான எளிமையான உவமை!!!

sasikala said...

அழகான வரிகள்

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Post a Comment