10.3.12

வண்ண உலகும் வண்ணமிலா உலகும்


பிடித்த அந்த இசையை எங்கே கேட்டாலும்
இப்போதெல்லாம் ஒரு வெறுப்பு ஊற்றெடுக்கிறது
இம்முறையும், நிறுத்திவிடவேண்டுமென்று 
அரைநினைவிலும் தன்னிச்சையாக ஸ்நூஸ் செய்யப்படுகிறது
காலைநேர கைப்பேசி அலாரம்!

மீண்டும் அந்த வண்ணமிலா உலகத்தின் 
கல்லூரிக் கலைவிழாவில் ஒரு டிராகனுடன் பாரதியின் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த பாலே நடனத்தைத் தொடரலாம் எனும்போது
முந்தைய நாளில் வலிதந்த அந்தப் பச்சைத்துரோகமோ  
அது குறித்த வலியோ ,
தொலைந்து போன பொருளொன்றின் நினைவோ 
எதுவோ பிரவாகிக்க 
டிராகன் தன் சாந்த சொரூபத்தைக் கலைத்து நெருப்பைக் கக்குகிறது! 

அந்த சமயத்தில் மீண்டுமொரு முறை அதே இசை,
இம்முறை வெறுப்போன்றும் தீவிரமில்லை...
கண்முன்னிருக்கும் வண்ண உலகை அடுத்த 16 மணிநேரத்திற்கு 
எதிர்கொள்ள வேண்டுமென்பதைத் தவிர!

3 comments:

விச்சு said...

துரோகம் தரும் வழி கடுமையானதுதான்.

SURYAJEEVA said...

கனவுகளுக்கு வண்ணம் இல்லை என்று அறிவியல் சொன்னாலும் எதோ ஒரு வகையில் கனவுகளில் வண்ணத்தை பார்த்த நினைவு மட்டும் உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது

RAJA RAJENDRAN said...

sorry, idhu kattoorai thozhi !

Post a Comment