7.6.12

ஒரு பயணத்தின் கவிதை

தினசரி ஓடும்
கனரக வேகத்தில்
மறக்கப்பட்டோ
புறக்கணிக்கப்பட்டோ போகின்றன
கவிதைக்கான தருணங்கள்!

ஒரு பயணத்தின் விடியலில்,
பை நிரப்பும் படலத்தில்,
சகபயணியின் இருப்பில்,
தோழமை ஒன்றின் புரியா மௌனத்தில்,
மனம் கிளரும் ஒரு ஜன்னலோரக் காட்சியில்,
புரிதல் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பொன்றில்,
திணறிச் சிரித்த சிரிப்புகளில்,
முடிவின் பிரிவுக் கண்ணீரில்
என்றான எதிர்பாரா
தருணங்களில் தவிர்க்க முடியாது
வெளிப்பட்டு விடுகின்றன கவிதைகள்!

3 comments:

புஷ்பராஜ் said...

கவிதை கண் கொண்டு கண்டால்
காண்பவை எல்லாமே கவிதைதான்!!!

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

அருணன் கோபால் said...

எழுதும் போது நினைப்பது அல்ல கவிதை !
நினைக்கும் போது எழுதுவது .. என்ன எழுத நினைக்கும் போது பேனா தேடலில் மறந்தவைகள் நிறைய உண்டு !!!

Post a Comment