4.1.11

அக்கறை

விளக்கொளியில் விரல் சுட்டுக்கொண்ட போது
எனக்காய் பதறினாய்!
நீ சொல்லால் சுடும் முன் விளக்கு
முந்திக்கொண்டதாலா?

சிறு கத்தி என்னைக் கீறி
சிறு துளி செந்நீர் சிந்தியதற்கு வெகுண்டாய்!
என் இதயத்தை கீறும் உன்
பணியை பங்குபோட்டுக் கொண்டதாலா??

2 comments:

Sathish said...

ivvalavu kobam yen...?

kayalvizhi said...

ஏதோ ஒரு முறை உணர்ச்சிவயப்பட்டு எழுதியது தோழரே!!

Post a Comment