13.4.11

அன்புடன் விழுது

அன்பு
பாசம்
நேசம்
காதல்
பகிர்வு
நம்பிக்கை
இச்சொற்களுக்கெல்லாம்
அர்த்தம் கற்றுத்தரும் வேலை
இருந்ததில்லை உங்களுக்கு..
உங்கள் உறவு கற்றுத்தந்தது நேரடியாய்..

22 ஆண்டுகளும்
தினந்தினம் புதியதாய்த்
துளிர்த்தது போல் உங்கள் அன்பு..
கற்றுத் தரும் இந்த தலைமுறைக்கு
காதலின் மகத்துவம்...

அதனால் தானோ புத்தாண்டில் மணம் செய்துகொண்டீர்?

வாழ்வு தரட்டும் புதுப்புது வழிகள்
உங்கள் நேசம் பெருக..


வேர்களை திருமண நாளுக்காக வாழ்த்தும் விழுது...

6 comments:

நிரூபன் said...

வாழ்த்துக் கவிதை... நிறைவான பொருளில் பாசப் பிணைப்பினைச் சொல்லி நிற்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

அருமை....

தம்பி கூர்மதியன் said...

அடடா அப்பா அம்மாகிட்ட காமிச்சாச்சா கவிதைய..??

அப்பா அத்தாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடு டா..

நானும் கேக்கணும்னு இருந்தேன்.. புதுவருசத்தில் புதுவாழ்க்கை.. கொடுத்து வச்சவங்க உங்க அம்மா அப்பா..

எனக்கு இப்படியொரு தங்கையை கொடுத்ததற்கும் நன்றி சொல்லிடுமா..

ஊருக்கு போய் அப்பா அம்மாவோட இந்த நாள் கொண்டாடுவன்னு நினைக்கிறன்.. ஜமாய்.!!

கயல்விழி said...

சொல்லிடறேன் அண்ணா.. ஊருக்கு போகல.. :( :(

கயல்விழி said...

@மனோ & நிரூபன் அண்ணா.. நன்றி :)

அஹமது இர்ஷாத் said...

Blog Description Good..

Post a Comment