காதலர் தினம், பிறந்தநாள், முதன்முதலில் சந்தித்த நாள் என்று பார்த்துப் பார்த்து கிஃப்ட் வாங்கிக் கொடுத்து, எக்கச்செக்க ரியாக்ஷன் எதிர்பார்த்து, ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குபவரா நீங்கள்?
"நீ கடைசியா எப்போ I love you சொன்னே ஞாபகம் இருக்கா?" என்ற கேள்வியில் சிக்கி சின்னாபின்னமான அனுபவம் உண்டா?
நீங்கள் தனியரில்லை :D நாம் கூட்டத்தோடு தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது.. "அன்பு மொழிகள்" எனும் கருத்தியல்.
ஒவ்வொரு மனிதரும் தன் பிரியத்தை வெவ்வேறு வழியாக வெளிப்படுத்துகிறார். பொதுவாக அவற்றை ஐந்து வகைப்படுத்தியிருக்கிறார் Gary D Chapman. பரிசுப்பொருட்கள் அளித்தல், உடன் நேரம் செலவிடுதல், அன்புறுதியான சொற்களைப் பேசுதல், சேவை செய்தல், ஸ்பரிசம் என இந்த ஐந்தில் ஏதேனும் இரண்டை நாம் ஒவ்வொருவரும் அன்பு வெளிப்பாட்டு மொழிகளாகக் கொள்கிறோம். நம்மவர் எந்த மொழிவாயிலாக அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவ்வழியில்தான் பெரும்பாலும் நாம் நம் அன்பை வெளிப்படுத்துகிறோம்.
ஸ்பரிச வெளிப்பாட்டை எதிர்பார்க்கும் உங்களவருக்கு எந்தப்பரிசுப் பொருளையும் விட உங்கள் ஒரு முத்தம் நிறைவளிக்கலாம். எதிர்பார்க்கும் வடிவத்தில் அன்பை வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது மேஜிக் :)
இப்படியெல்லாம் காதலை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டுமா? தொடர்ந்து அன்புமழை பொழிய வேண்டுமா என்ன? வயதாகிறது, வேறு வேலை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறவர்களுக்கு.. நீர் ஊற்றாத செடியாக உங்கள் உறவை வாட விடாதீர்கள் :) அவ்வப்போது அன்பு மொழிகளால் உங்கள் உறவுக்கு!