6.3.11

உவமை

உடலுறையும் உயிர் ஒருநொடி
உறைவது போலோர் உணர்வு..
ஊசி ஒன்று உச்சி முதல் அடி
தொட தீண்டிடும் வேதனை..
நாளங்கள் நிரப்பும் குருதி
சிறிது ஓய்வெடுக்கும் வலி..
நெருப்பினால் சுட்டுப் பின்
வெந்நீரில் குளிப்பாட்டும் வெம்மை..
மார்கழி மாத குளிரிரவில்
பனிக்கட்டி மீது உறக்கம்..
என்றெல்லாம் உவமை தேடித் தோற்கிறேன்,
உன் பிரிவு தரும் வலிக்கு..

8 comments:

VAIBHAV SRINIVASAN said...

Superb!!! Metaphor at its best

கலாநேசன் said...

பிரிவின் வலி சொல்லும் வரிகள்....

Nanthu said...

Superb....

கயல்விழி said...

நன்றி :)

PRAKASH S said...

Nice...... very very superb

கயல்விழி said...

Thank u :)

அருண் said...

பிரிவு என்பதையே உவமையாக வைப்பது தான் இதன் தீர்வு!!!

Vivek.a.a said...

அருமையான வார்த்தைகள்.....

Post a Comment