இதுவரை திரையிலும் கண்டிராத
ஒரு பனிச்சூழல்..
திட்டுத்திட்டாக ரோஜா இதழின்
நிறத்தில் சில துளி அடையாளங்கள்..
நகர்கிறது குவியம் மேல் நோக்கி..
என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்
கீழுள்ள பனிமேல் பட்டு
தோன்றுகிறது ரோஜாநிறத் திட்டு..
மையிட்டது போல்
குருதி நிறை கண்கள்
திரண்டிருக்கின்றன ஒரு திசையில்..
பாசமாய்ப் பல நாள் சித்திரமென
பார்த்து ரசித்த உன் பாதத்தடங்கள்
கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,
தடத்தில் குதிகால் என் பக்கம் என்பதாலோ!
கண்ணுக்கெட்டும் தொலைவுமட்டும்
உன்னைத் தேட நினைத்துப்பின்
கானல்நீராய் உன்னைக் கனாவிலும்
காண விருப்பமில்லாமல் கண்திறக்கிறேன்..
கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”
நன்றி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103204&format=html
நன்றி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103204&format=html
8 comments:
முதல் மழை எனை நனைத்ததே
>>கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”
விஞ்ஞானம் வளர்கையில் மனித நேயங்களும், உறவுகளின் நெருக்கமும் குறைகிறது
//கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,
தடத்தில் குதிகால் என் பக்கம் என்பதாலோ!//
கவிதை தேன் ஒழுகிறது.. துடைத்துகொள்ளுங்கள்..
//கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”//
ம்ம்..
கவிதையில் வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி
நன்றி :)
என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்
கீழுள்ள பனிமேல் பட்டு
தோன்றுகிறது ரோஜாநிறத் திட்டு..//
கண்ணீரை ரோஜாவிற்கு உவமிக்கும் உங்களின் கவி நயத்தின் சிறப்பினை உணர்ந்தேன். அழகான சொல்லோவியங்களால், இலகு நடையில் கவியினைத் தந்துள்ளீர்கள்..
கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”//
எங்கு போனாலும் பின் தொடரும் கனவுகளை வைத்து, கனவுகளைக் கவியாக்கியுள்ளீர்கள் சகோதரம். கவிதை இயல்பு நடையில் வார்த்தைகளைக் கோர்த்த கனவினை மெய்ச்சும் நினைவாக இருக்கிறது.
:) நன்றி நிரூபன் அண்ணா
Post a Comment