வெளியுலக வெறுப்பை வீட்டில்
கொட்டும் சிடுசிடு அப்பா..
கடுகு பொரிவதைப்போல்
தானும் பொரியும் அம்மா..
கவன ஈர்ப்பு போராட்டமாய்
அழுது தீர்க்கும் குழந்தை..
வீட்டில் மகிழ்ச்சி நிலவ
நிறுவப்பட்ட புத்தர் சிலை
மட்டும் வாசலைப் பார்த்து
சிரித்தபடி வீற்றிருக்கிறது...
12 comments:
குடும்பங்கள் அவ்வளவுதான்...
புத்தராவது சிரிக்கிறாரே...
யாதார்த்தமான அழகிய கவிதை
# கவிதை வீதி # சௌந்தர்.. நன்றி தோழர் :)
அருமையான கவிதை...வாழ்த்துக்கள்...
சொந்த அனுபவமாக இருக்கக்கூடாதென்று இறைவனை வேண்டுகிறேன்...
என் கவிதைகளையும் வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்...கயல்விழி
எறும்பு ஊறக் கல்லும் குழியுமாம். என்றேனும் ஓர்நாள் தன்னையும் விஞ்சக்கூடும் இல்லத்தின் நிம்மதியும் மகிழ்வுமென்றே காத்திருக்கிறாரோ புத்தர்? இதுவும் கடந்து போகுமென்றே இதயம் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். கவிதை நல்லா இருக்கு கயல்விழி.
கவன ஈர்ப்பு போராட்டமாய்
அழுது தீர்க்கும் குழந்தை..
மிகவும் கவர்ந்த வரிகள்
@reverie.. நன்றி சகோ :) சொந்த அனுபவம் நிச்சயமாக இல்லை, இனிமேலும் இருக்காது..
@கீதா.. நன்றி அம்மா..
nice lyrics. ur creativity is awesome..keep it up.
இந்த நிலை மாறுவதற்காகவே வைக்கப்பட்டதோ புத்தர் சிலை!
யதார்த்த வாழ்வின் கவிதை!
வாசலைப் பார்த்துக்கொண்டே இருப்பதை உள்ளே இருந்தே பார்த்த விதமும் ! உள்ளுக்குள் தமிழ் கவிதையாய் உருவெடுத்த விதமும் அருமை ! ஒரு சின்ன சிந்தனையில் உங்கள் கவித்துவம் வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது ! நீங்கள் புத்தரைப் பார்த்துக்கொண்டே இருங்கள் ! நாங்கள் உங்கள் கவிதைகளை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் ! வாழ்த்துக்கள் ! - அன்புடன் அனாதைக்காதலன் !
நன்றி :)
Post a Comment