22.8.11

பொன்மாலைப்பொழுதிலான பேருந்துப்பயணம்


ஒரு பொன்மாலைப்பொழுதிலான
பேருந்துப்பயணம்,தோழியுடன்..
வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய
அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும்
முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும்
சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று!
இங்கிதம் தெரிந்தும்
எங்கும் நகர முடியாத தவிப்பு..
மூடிகளில்லா காதுகளைப்படைத்த
இயற்கையை நொந்தபடி
கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை..
கிடைத்துவிட்டது செயற்கை மூடி..
என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது,
‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’
-களிலிருந்து அவளையும்
‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும்
பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!நன்றி : திண்ணை

8 comments:

ரெவெரி said...

அனுபவக்கவிதை கலக்கல்...

R.Elan. said...

கவிதை நன்று.வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

அருமையான கவிதை. அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது. வாழ்த்துக்கள்

கயல்விழி said...

நன்றி :)

கீதா said...

அவளும் இங்கிதம் அறிந்திருக்கவேண்டும். அழகான கவிதை. ரசித்தேன்.

குணசேகரன்... said...

again kayal rocks with this kavithai in a modern way..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அனுபவ வரிகள் அருமை தங்கையே......

புஷ்பராஜ் said...

இயல்பான வரிகள்,

Post a Comment