5.9.11

அந்த ஒரு விநாடி

அந்த ஒரு விநாடியைத்தான்
தேடுகிறேன்..
உன் நாட்குறிப்பிலும்
என் நாட்குறிப்பிலும்,
நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை
என் விழிகளைப் போல்..

ஏதோ ஒரு கடிகாரம் அந்த
நொடியோடு நின்றிருக்கும்
என்றெண்ணி கண்பதிக்கிறேன்,
எந்த கடிகாரமும்
துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை,
என் இதயத்தைப்போல்..

சிவந்த கண்களோடும்
கனத்த இதயத்தோடும் தேடுகிறேன்,
பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான
நம் நட்பில் சந்தேக விஷத்துளி
வீழ்ந்த அந்த நொடியை,
நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக
அழிக்க எண்ணி… நன்றி : திண்ணை

7 comments:

குணசேகரன்... said...

what happend to u? first time u published other person kavithai . no time ah? any way..very nice..all words resemble to ur's kavithai..

கயல்விழி said...

Its mine :)

புஷ்பராஜ் said...

தேடிப் பிடித்து
அழிக்க நினைக்காமல்
மறக்க நினைக்கலாம்
அந்த நொடியை!!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
ஏதோ ஒரு கடிகாரம் அந்த
நொடியோடு நின்றிருக்கும்
என்றெண்ணி கண்பதிக்கிறேன்,
எந்த கடிகாரமும்
துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை,
என் இதயத்தைப்போல்..
//
அருமையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல கவிதை

கயல்விழி said...

nandri :)

கீதா said...

விஷத்தின் துளி வீழ்ந்திருக்கலாம் ஒரு நொடியில்! அது உருவாக்கப்பட்டது எத்தனைக் காலமோ? விஷமென்று அறிந்தபின் விலகுவதே அறிவுடைமை.

கவிதை மனத்தின் வலியை அழமாய்ப் பிரதிபலிக்கிறது.

Post a Comment