6.10.11

சிற்பம்


‘பாவம் காகம், பசிக்குமென்று
ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’
என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!

பார்த்துப் பிடிக்கவில்லை,
பழகிப்பார்த்துப் பிடித்தது,
சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!

‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும்
‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும்
பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்!

இவை மட்டுமல்ல
அழகாய் உன் தனித்துவத்தோடு
செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!

nandri : thinnai

4 comments:

புஷ்பராஜ் said...

‘ரெயின் ரெயின் கம் அவர் வே’

rain rain go away என்று படித்ததாய் நினைவு.ஒரு வேளை குழந்தை சொல்வதாய் சொல்வதால் மாறியிருக்கலாம்

கயல்விழி said...

இல்லை தோழர்.. எல்லாமே மாற்றப்பட்ட குழந்தைக் கதைகள், பாடல்கள் தான்

Prabu Krishna said...

க்யூட்

புஷ்பராஜ் said...

குழந்தைகளை பற்றி எப்படி சொன்னாலும் கவிதை இனிக்கும். இதுவும் இனிக்கிறது!!

Post a Comment