புழுவாய்க் கூட்டிலடைந்து
கிடந்து பல்லாயிரம்
போராட்டம் நடத்திப்பின்
வெளிவந்தோம்!
ஆரம்பத்தில் கல்லடி, மரத்துப்போனது!
பலநூறாண்டாய்த் தொடர்கிறது சொல்லடி..
ரணங்கள் ஆறுவதே இல்லை..
இன்று நம் சமூகத்தில்
அந்தப்புரம் பல கொண்டவனெல்லாம்
உத்தமன் என்ற போர்வைக்குள்..
தனிமையில் வாழ்வாளாயின்
கண்ணகிக்கும் கிடைக்கும்
“கேடுகேட்டவள்” பட்டம்!
பாரதி!! இப்பட்டம் ஆளவா பாரினில் பெண்கள்??
வெற்றியில் மாலைகள் சூடவேண்டிய
தோள்களுக்கு அநேக நேரங்களில்
புதுச் சிலுவைகள்!
சாதிக்கும் சாதியின்மேல்
சகதியடிப்பது புதிதல்ல..
அடிக்கப்பட்டது , எங்கள்
வளர்ப்பின் மேல்,
படிப்பின் மேல்,
கலையின் மேல்,
நம்பகத்தின் மேல்..
தண்ணீர்பட்ட தாமரை இலையாய் இருந்தோம்!
தொடர்கிறது, எங்கள்
நடத்தையின் மேல்,
கொண்ட காதலின் மேல்,
கற்பின் மேல்..
மனபாரத்தால் மூழ்கடிக்கப்படுகிறோம்!
எங்களையும்
எங்கள் மனதையும் கல்லாக்கிக்கொண்டு
வாழும் ‘கலியுக அகலிகைகள்’ !!!
16 comments:
அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை..
//உத்தமன் என்ற போர்வைக்குள்..//
கலைஞரை தாக்கும் அளவுக்கு தைரியமா.? ஹி ஹி.. கலைஞரே பாத்துக்கோங்க..
இவ்வளவு கோபமா, இவ்வளவு வெறுப்பா எப்படி உனக்கு எழுத தோணுச்சு.?
இப்படிபட்ட ஆள் கிடையாதே நீ.!!
எனி ப்ராப்ளம்.?
உன்னுடைய சாளரம் திறக்கையில் கவிதையை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.!!
@தம்பி கூர்மதியன்..
//அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை.//
என்ன அண்ணா பண்றது? எவ்வளவு நாளைக்கு ஒரே மாதிரி எழுதறது?
கண்டிப்பா கலைஞர தாக்குற நோக்கமெல்லாம் கிடையாது.. பொதுவான கருத்து தான்.
ஐயயோ ப்ராப்ளம் லாம் கடவுள் புண்ணியத்துல எதுவும் இல்ல.. அப்படியே இருந்தாலும் உங்கள மாதிரி உடன்பிறப்புகள் இருக்கும் போது கவலை வேண்டிய அவசியம் என்ன எனக்கு..?
நன்றி அண்ணா!
@தம்பி கூர்மதியன்..
//அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை.//
என்ன அண்ணா பண்றது? எவ்வளவு நாளைக்கு ஒரே மாதிரி எழுதறது?
கண்டிப்பா கலைஞர தாக்குற நோக்கமெல்லாம் கிடையாது.. பொதுவான கருத்து தான்.
ஐயயோ ப்ராப்ளம் லாம் கடவுள் புண்ணியத்துல எதுவும் இல்ல.. அப்படியே இருந்தாலும் உங்கள மாதிரி உடன்பிறப்புகள் இருக்கும் போது கவலை வேண்டிய அவசியம் என்ன எனக்கு..?
நன்றி அண்ணா!
sameeba kaalamaai naan unnai paarthu adhigam viyakkiraen.vaazhthukkal thozhi :D
கண்ணகிக்கும் கிடைக்கும்
“கேடுகேட்டவள்” பட்டம்!//
துச்சமென தூக்கி எறி. அற்பர்களின் நிந்தனைகளை
@diya நன்றி தோழி.. :)
@நாய்க்குட்டி மனசு.. உண்மை தான் சகோ.. தூக்கி எறிந்தால் தான் வாழ முடியும்..
தலைப்பே அருமை!!! :):) உள்ளடங்கிய கருத்தைக் கேட்க வேண்டுமோ? :)
நன்றி அக்கா :)
nice one.... try more
கலியுக அகலிகைகள் ராமனின் காலடித் தடத்துக்குக் காத்திராமல் தமக்குத் தாமே சாபவிமோசனம் தேடிக்கொள்ளவேண்டியதுதான். கவிதை வெகு அருமை, கயல்விழி.
கலியுகத்தில் நாங்கள் அகலிகைகளை பார்த்ததைவிட அன்னை இந்திரா,புரட்சி தலைவி என்ற பெயர்களில் தாடகைகளை பார்த்து கொண்டு இருக்கிறோம்.
@ காலப் பறவை.. நன்றி :)
@கீதா சரி தான் அம்மா.. :) நன்றி
@vijayan.. தாடகை என்று குறிப்பிட்டது என்ன பொருளில் என்று தெரியவில்லை சகோ.. ஆனால் சில ராமர்கள் தாடகை வதம் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்.. என்ன.. தாடகைக்கு அம்புகள், இந்திரா போன்றவருக்கு துப்பாக்கி குண்டுகள்..
Post a Comment