என் வாழ்வில் உனக்கான
வெளி குறைந்துவிட்டதாய்
புலம்புவதல்லாத தொனியில்தான்
சொல்ல முயற்சிக்கிறாய்!
நீ நிறைக்கும் இடமது, சமீபமாய்
கூழாங்கல்நிறை பானைக்குள் விழும்
மணலின் இடம் பிடித்திருக்கிறார்கள் சிலர்..
கூட்டல் கழித்தல்களுக்கு இடமில்லாத
மாறிலியாய் இருக்கிறது உன் இடம்!
புரிந்துகொள்ளாதாதற்கென்று உன்னைக்
கோபிப்பதில் அர்த்தமில்லை..
புரிந்து கொள்ளும்படி நடந்துகொள்ளாத
என்னைத்தான் நொந்துகொள்கிறேன்...
அனுமனின் உக்தியை நினைத்தோ
தானாய்க் கிழிகிறது நெஞ்சம்!
2 comments:
மிகவும் அருமையான கவிதை. பிரிவின் வலிகள், மனதின் குழப்பங்கள் இணையும் புள்ளியில் பிறக்கும் புதிய தெளிவுகள் .. அது தான வாழ்க்கை .
அனைவருமே உணரும் ஒரு வித அனுபவம்.
”புரிந்துகொள்ளாதாதற்கென்று உன்னைக்
கோபிப்பதில் அர்த்தமில்லை..
புரிந்து கொள்ளும்படி நடந்துகொள்ளாத
என்னைத்தான் நொந்துகொள்கிறேன்...”
இதை மிகவும் ஆழமாக கையாண்டுள்ளீர்கள். அருமை
Post a Comment