8.3.11

இன்று மகளிர் தினம்!

வாழ்த்தும் உள்ளங்களே!

மாதம் சில சென்று
மாங்காய், மண் தின்று
மனம் பூரித்து இருப்பவள்
கருவினை சோதித்து
"பெண்ணா?"
முகம் சுளித்து
வாழ வரம் வாங்கி வந்தவளை
கருவினில் கருகச் செய்யும்
கயமை என்று ஒழியுமோ,

பள்ளி, கடைவீதி என்று
தேவைக்காய் தனியே வழியனுப்பி
உள்ளுக்குள் எரியும்
தாய் வயிற்று நெருப்பும்,
மணமுடித்த பின் வரதட்சணை
என்ற பெயரால் வதைக்கும்
புகுந்த வீட்டு வெறுப்பும்,
என்று அணையுமோ,

இல்லத்திலும் இப்புவியாளும்
அரசியலிலும் முப்பதிமூன்றிற்கு
மூக்காலழும் நிலை மாறி
அரசியலிலும் இனி இல்லத்திலும்
இடஒதுக்கீடே தேவைப்படாத
சமத்துவம் என்று நிலவுமோ,

அன்று கொண்டாடுவோம் "மகளிர் தினம்"!!

4 comments:

Unknown said...

மூவில் ஒன்றா???
அன்றே,
அகத்திலும் புறத்திலும் "சக்தியின்றி சிவத்திற்கே சக்தியில்லை"யென்று
செகத்துக்கே சகத்தில் உரைத்தானே,
என் ஈசன்
உன் தாசன்
அக வாசன்...
நினைவில்லையோ?????????

ஓஓஓ..........

வலப் பக்கம் உன்னை இணைத்ததால் "வல‍- ஒதுக்கீடு" செய்துவிட்டான் என்று குறையோ??? :p

வல ஒதுக்கீடோ இட ஒதுக்கீடோ என்பதை யாம் அறியவில்லை..
ஆனால்,
அவன் உறைத்தது
"என் வல‍- ஒதுக்கீடல்ல இவள்,
என் வலு- ஒதுக்கீடு" என்றே நான் அறிந்தேன்..

அர்த்தநாரி அற்பநாரி அல்ல....:)

இருபத்தி இரண்டென்றால், கலப்படம் இருக்கும்;
ஒதுக்கலாம்....
ஆனால்,
இருபத்தி நான்கில்,
தேடினாலும் ஒதுக்க இயலா.....!

நான் பொன்னையும் குறித்தேன்..
பெண்ணே, உன்னையும் குறித்தேன்...!

HAPPY WOMAN'S DAY....:)

கயல்விழி said...

//அர்த்தநாரி அற்பநாரி அல்ல..//

உண்மை தான்..
அர்த்தநாரியைப் போல் தன் அகத்திலும் புறத்திலும் பங்களித்திருக்கும் சகோதரர்களுக்கு நானும் என் எழுதுகோலும் தலைவணங்குகிறோம்!

ஆனால் அந்த ஆதிசிவன் தாண்டவத்தில் அன்னையவள் கால்தூக்கி ஆடமுடியாத பெண்மையின் இயற்கை பலவீனத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டானே(நியாப்படுத்த ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும்)! அதை மட்டும் பின்பற்றும் சிலபல ஆண்களுக்கும் பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பதாக பெண் கொடுமையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கும் பெண்களையும் சாடுவதற்காகவே என் இந்த கிறுக்கல்..

//வலப் பக்கம் உன்னை இணைத்ததால் "வல‍- ஒதுக்கீடு" செய்துவிட்டான் என்று குறையோ??? :p//
மிக நயமான வரிகள்..

நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு..
தங்களை எழுதச் செய்த இந்த கவிதைக்கும்..

Anonymous said...

vazthuvatharku thaguthi illai vanagugiren

கயல்விழி said...

நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.. யாராயினும் வணங்கும் அளவுக்கு நான் எந்த விதத்திலும் தகுதி ஆனவள் அல்ல.. உங்கள் அன்பும் வாழ்த்தும் எனக்கு போதும்.

Post a Comment