19.9.11

பேசித்தீர்த்தல்

சவ்வூடு பரவலின்
விதிப்படி பரவுகிறது
கோபமும் வெறுப்பும்,
அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து
குறைந்திருக்கும் இடத்திற்கு,
விழிக்குப் புலப்படா ஒரு
படலத்தில் ஊடுருவி..
விதிமீறி கிழிகிறது
அப்படலம் சில பரிமாற்றங்களில்..
பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி
முன்னேறுகிறேன்..
மனம்மாறி தீர்த்துப்பேசிடத்
தோன்றுகிறது!
ஒன்றுமில்லை இன்னும்,
தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது
எல்லாம்..
இல்லை! தீர்ந்துபோவதற்கு
ஒன்றுமே இருந்திருக்கவில்லையோ
என்று கூடத்தோன்றுகிறது!!



nandri: thinnai

11 comments:

Unknown said...

பேசித்தீர்த்தல் நல்ல கவிதை சகோதரி ....

தம்பி கூர்மதியன் said...

நாளைக்கு நாள் முதிர்ச்சி அடைகிறது உன் எழுத்துக்கள்... சிறப்பு..

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

காந்தி பனங்கூர் said...

அருமையான கவிதைங்க.

கயல்விழி said...

நன்றி :) :)

Prabu Krishna said...

Super. Using The Words Is amazing.

சவ்வூடு பரவலின்
விதிப்படி பரவுகிறது
கோபமும் வெறுப்பும்,//

especially this lines.

குணசேகரன்... said...

first three lines is very nice..

Harini Nathan said...

//சவ்வூடு பரவலின்
விதிப்படி பரவுகிறது
கோபமும் வெறுப்பும்,
அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து
குறைந்திருக்கும் இடத்திற்க//

அருமையான கவிதை :)

கயல்விழி said...

நன்றி :)

புஷ்பராஜ் said...

”சவ்வூடு பரவல் விதி” என் பள்ளி காலத்தை நினைக்க தூண்டுகிறது.

கீதமஞ்சரி said...

பேசித் தீர்க்கமுடியாவிடில் தீர்த்துப் பேசிவிடல் நல்லது. அருமை.

Post a Comment